search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வக்கீல் தாக்குதல்"

    • ஜோசப் ராஜஜெகன் வழக்கம் போல தனது அலுவலகத்திற்கு சென்றார்.
    • அலுவலகத்தின் ஷட்டரை திறக்க முயன்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் திடீரென ஜோசப் ராஜஜெகனை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்ப முயன்றனர்.

    வள்ளியூர்:

    நெல்லை மாவட்டம் வள்ளியூர் காமராஜர்நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் ஜோசப் ராஜஜெகன் (வயது 46). இவர் வள்ளியூர் கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவரது அலுவலகம் வள்ளியூர் மெயின் ரோட்டில் அலுவலகம் வைத்துள்ளார்.

    இன்று காலை ஜோசப் ராஜஜெகன் வழக்கம் போல தனது அலுவலகத்திற்கு சென்றார். அவர் அலுவலகத்தின் ஷட்டரை திறக்க முயன்ற போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் திடீரென அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்ப முயன்றனர். அதில் ஒருவரை வக்கீல் பிடித்து கொண்டார். மற்றொருவரை அப்பகுதி பொதுமக்கள் விரட்டி சென்று பிடித்தனர். ஒருவர் தப்பிச் சென்றுவிட்டார்.

    தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு வள்ளியூர் டி.எஸ்.பி. லோகேஷ்வரன், இன்ஸ்பெக்டர் ஸ்டீபன்ஜோஸ் மற்றும் போலீசார் விரைந்து சென்று படுகாயமடைந்த வக்கீலை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பின்னர் பிடிபட்ட 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் மூன்றடைப்பு பகுதியை சேர்ந்த பிரவீன் ராஜா (22), கார்த்திக் (22) என்பதும் நெல்லையில் உள்ள கல்குவாரியில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    தப்பி ஓடியவர் ஆனந்த ராஜ் (40) என்பதும் தெரியவந்தது. இவர்கள் எதற்காக ஜோசப் ராஜ ஜெகனை வெட்டினார்கள்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×